திமுக பெரிய பிளவை சந்திக்கவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற தேர்தல் நெருங்கும் போது, இன்றைக்கு இருக்கும் கட்டுக்கோப்பான திமுக இருக்காது என்றார். திமுக கூட்டணியில் தற்போது இடம்பெற்றுள்ள கட்சிகளில் பெரும்பாலானவை, அதிமுக அணியில் சேர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
திரையரங்கு திறப்பு குறித்த கேள்விக்கு, கொரோனா தாக்கம் குறைவதை பொறுத்து, மீண்டும் திறக்க அனுமதிப்பது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கூறினார்