அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்துத் தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமை முடிவெடுக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கூடி முதலமைச்சரைத் தேர்வு செய்வார்கள் எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு திங்களன்று கூறியிருந்தார்.
ஆனால் முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்தியே தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்றுத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதுரையில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை முன்னிலைப்படுத்தியே சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதனிடையே சென்னையில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்துத் தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமை முடிவெடுக்கும் எனத் தெரிவித்தார்.