இபிஎஸ் - ஓபிஎஸ்சை முன்னிலைப்படுத்தியே அதிமுக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு எம்எல்ஏக்கள் கூடி முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என்று முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான கேள்விக்கு நேற்று முன் தினம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்தியே தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மதுரையில் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்சை முன்னிலைப்படுத்தி அதிமுக பெற்ற வெற்றிகளை பட்டியலிட்டார்.