ராஜஸ்தான் சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்கிற முதலமைச்சர் அசோக் கெலாட்டின் கோரிக்கையை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா மூன்றாம் முறையாக நிராகரித்துவிட்டார்.
ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து சதி செய்ததாகக் கூறித் துணை முதலமைச்சர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.
இதையடுத்துத் தனது அரசுக்குப் பெரும்பான்மை உள்ளதாகக் கூறும் முதலமைச்சர் அசோக் கெலாட், அதை மெய்ப்பித்துக் காட்டச் சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தினார்.
இந்தக் கோரிக்கையை இருமுறை ஆளுநர் நிராகரித்த நிலையில், மூன்றாம் முறையாகச் செவ்வாயன்று ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்தினார். சட்டமன்றத்தைக் கூட்ட 21 நாட்களுக்கு முன் அறிவிப்புக் கொடுக்க வேண்டும் எனக் கூறி முதலமைச்சரின் கோரிக்கையை மூன்றாம் முறையாக ஆளுநர் நிராகரித்து விட்டார்.