எம்எல்ஏக்களுக்கு 21 நாட்கள் முன்னதாக நோட்டீஸ் உள்ளிட்ட 3 நிபந்தனைகளை ஏற்றால், சட்டப்பேரவையை கூட்ட தயாராக இருப்பதாக ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட அனுமதிக்குமாறு, ஆளுநரை முதலமைச்சர் அசோக் கெலாட் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், கொரோனா காலகட்டம் என்பதால், சட்டப்பேரவையை கூட்டுவதற்கு எம்எல்ஏக்களுக்கு 21 நாள் நோட்டீஸ் தர தயாரா? பேரவையில் சமூக இடைவெளி எவ்வாறு கடைப் பிடிக்கப்படும்? நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் திட்டம் இருந்தால் அதற்கு சில நிபந்தனைகளை பின்பற்றத் தயாரா? என மாநில அரசுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விவகாரத்தில் முடிவெடுப்பதை தாமதிக்குமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை சபாநாயகர் சி.பி.ஜோஷி திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.