ஜனநாயகத்தை காக்க மக்கள் குரல் கொடுக்க வேண்டுமென காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக மூத்த தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியதால் அரசியல் குழப்பம் நிலவுகிறது.
இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில், ஜனநாயகத்துக்காக பேச ஒன்றுபடுவோம், ஜனநாயகத்தை காக்க குரல் கொடுப்போம் என்ற தலைப்பில் வீடியோ பதிவு ஒன்றை ராகுல் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஒட்டுமொத்த நாடும் கொரோனாவுக்கு எதிராக போராடும் நிலையில், ராஜஸ்தானில் அரசியலமைப்பை பாஜக கிழித்தெறிந்து வருவதாகவும், ஜனநாயகத்தை அழிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ராஜஸ்தான் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.