ராஜஸ்தான் நிலவரம் குறித்து தேவைப்பட்டால் குடியரசுத் தலைவரை சந்தித்து காங்கிரஸ் முறையிடும் என அக்கட்சியின் மூத்த தலைவரும், முதலமைச்சருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியதால் குழப்பம் நிலவும் நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தை உடனடியாக கூட்ட கெலாட் விடுத்த கோரிக்கை குறித்து ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கேள்வியெழுப்பியிருந்தார்.
ஜெய்ப்பூரில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே பேசிய கெலாட், தேவைப்பட்டால் பிரதமர் இல்லத்துக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இதேபோல் ஆளுநரையும் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் ஆளுநரை நேரில் சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்கள், சட்டம் ஒழுங்கு பாதிப்புக்கு பொறுப்பேற்க முடியாதென கெலாட் கூறியிருப்பதாகவும், ஆதலால் முதலமைச்சர் பதவியை அவர் ராஜிநாமா செய்ய வேண்டுமெனவும் கூறினர்.