தமிழக பாஜக தலைமை அலுவலக இடத்தை 30 கோடி ரூபாய்க்கு வாங்க தயாரா என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரிக்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், காமராஜர் அரும்பாடுபட்டு உருவாக்கி தந்த காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சொத்துகளை தவறான வழிகளில் பயன்படுத்த முயற்சிப்பதை சுட்டிக்காட்டிய காரணத்தால் அந்த இடம் 30 கோடி ரூபாய் மதிப்புடையது என்றும், அதை 3 கோடி ரூபாய்க்கு மிரட்டி வாங்கினார்கள் என்றும் கே.எஸ். அழகிரி தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய விலையையும் தற்போதைய சந்தை நிலவரத்தையும் ஒப்பிட்டு பேசியிருப்பது அவர் எத்தகைய குழப்பத்தில் உள்ளார் என்பதை காட்டுகிறது என்று கூறியுள்ள முருகன், அந்த இடத்தை கொடுக்கையில் முக்தா சீனிவாசன் காங்கிரஸில் முக்கிய தலைவராக இருந்ததாகவும், தற்போது அவருடைய மகன் முக்தா சுந்தர் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.