நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் பட்டியலிட்டு, இதுதான் மத்திய அரசின் சுயசார்பு ('atmanirbhar) என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கொரோனா காலத்தில் மத்திய அரசின் சாதனைகளை பாருங்கள் எனக் கூறி, ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர், பிப்ரவரியில் நமஸ்தே டிரம்ப், மார்ச்சில் மத்திய பிரதேச அரசு கவிழ்ப்பு, ஏப்ரலில் மக்களை அகல் விளக்குகளை ஏந்த கூறியது, மே.யில் பாஜக அரசின் ஆறு ஆண்டுகால கொண்டாட்டம், ஜூனில் பீகாரில் காணொலி மூலம் பிரசாரம், ஜூலையில் ராஜஸ்தானில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி என கூறியுள்ளார்.
இதனால்தான் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவால் சுயசார்புடன் இருக்க முடிகிறது எனவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, நேற்று வெளியிட்ட பதிவில், சக்திவாய்ந்தவர் என்ற பிரதமரின் தோற்றம்தான், தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது என கூறியிருந்தார்.