மின்கட்டணம் குறித்து ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையின்றி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவே திமுக போராட்டம் நடத்துவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை வழங்கிய அவர், கொரோனா ஊரடங்கு காரணமாக உலக நாடுகளே பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முதலமைச்சர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முன்மாதிரியாக திகழ்வதாக குறிப்பிட்டார்.
class="twitter-tweet">மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவே திமுக போராட்டம் நடத்துகிறது-அமைச்சர் #MinisterRBUdhayakumar https://t.co/Ttp88jg49m
— Polimer News (@polimernews) July 21, 2020