ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க 3 எம்எல்ஏக்களுக்கு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை வழங்க குதிரை பேரம் நடந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரசைக் கவிழ்ப்பதற்காக எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ஜெயின், அசோக் சிங் மற்றும் பாரத் மலானி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் 3 எம்எல்ஏக்களுக்கு 100 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக சிறப்பு நடவடிக்கைக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் சுயேச்சை எம்எல்ஏ ஒருவருக்கு 25 கோடி ரூபாய் வழங்க பேரம் பேசப்பட்டது தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் சிறப்பு நடவடிக்கைக் குழுவினர் தெரிவித்துள்ள தகவல்களை ராஜஸ்தான் மாநில பாஜக மறுத்துள்ளது.