ஒன்றரை ஆண்டுக்காலமாக சச்சின் பைலட் தன்னிடம் பேசியதில்லை என்றும், அவர் மீண்டும் திரும்பி வந்தால் கட்டியணைத்து வரவேற்கப் போவதாகவும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அசோக் கெலாட், அமைச்சராகப் பதவியேற்ற ஒன்றரை ஆண்டுக்காலமாக சச்சின் பைலட் தன்னிடம் எதுவும் பேசவில்லை என்றும், ஆலோசனை எதையும் கேட்டதில்லை என்றும் குறிப்பிட்டார்.
எதிரெதிர் கட்சிகளில் உள்ளவர்களே பேசிக் கொள்வதாகவும், அதுதான் ஜனநாயகத்துக்கு அழகு என்றும் குறிப்பிட்டார். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பான வழக்கில் சச்சின் பைலட் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும், அவரே முன்வந்து விளக்கம் அளித்தது சான்றாக அமைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.