கொரோனா சூழலில் தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலர்களுக்குத் தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் பீகாரில் சட்டமன்றப் பொதுத்தேர்தலும், நாட்டின் பல தொகுதிகளில் இடைத்தேர்தலும் வரவிருப்பதைக் குறிப்பிட்டுள்ளது. தேர்தலையொட்டி வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடத்துவது குறித்த கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தேர்தல் ஆணையத்துக்கு ஜூலை 31 ஆம் நாளுக்குள் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.