ராஜஸ்தானில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்சி மாறி வாக்களிக்க விலை பேசியதாகக் கூறி மத்திய அமைச்சர் கஜேந்திர செகாவத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கப் பணம் தருவதாகக் கூறி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பன்வார் லால் சர்மா, விஸ்வேந்திர சிங் ஆகியோரிடம் தொழிலதிபர் சஞ்சய் ஜெயின், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் ஆகியோர் பேசுவதாகக் கூறப்படும் ஒலிப்பதிவு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இரு வழக்குகளைப் பதிந்த ராஜஸ்தான் காவல்துறையினர் சஞ்சய் ஜெயினைக் கைது செய்துள்ளனர்.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலிப்பதிவில் உள்ள குரல் தன்னுடையது இல்லை என்றும், இது தொடர்பாக எந்த விசாரணைக்கும் தயார் என்றும் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்துள்ளார்.