மகாராஷ்டிர பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர்கள் எந்த நேரமும் தங்களுடன் வரக்கூடும் எனவும் மாநில அமைச்சர் யசோமதி தாகூர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. 105 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாஜக தனிப்பெரும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் உள்ளது.
இந்நிலையில் காங்கிரசைச் சேர்ந்த மாநில அமைச்சர் யசோமதி தாகூர் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடன் தொடர்பில் உள்ளதால், ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால் பாஜக உடைந்துவிடும் என யசோமதி தாகூர் எச்சரித்தார்.
கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைப் பாஜக இழுத்துள்ள நிலையில், முதன்முறையாக பாஜக உறுப்பினர்களை இழுப்போம் என காங்கிரசைச் சேர்ந்த அமைச்சர் கூறியுள்ளார்.