சசிகலாவையும் அவர் குடும்பத்தையும் எதிர்த்தே ஆட்சியும் கட்சியும் செயல்பட்டு வருவதாக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், நாற்றம்பள்ளியை அடுத்த அக்ரகாரத்தில் தற்காலிகச் சித்த மருத்துவமனையை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதாகக் கூறப்படுகிறதே எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் கே.சி.வீரமணி சசிகலாவையும், அவர் குடும்பத்தையும் எதிர்த்துத் தான் அதிமுகவின் ஆட்சியும் கட்சியும் நடத்தி வருவதாகத் தெரிவித்தார். அதிமுகவுக்கு சசிகலாதான் எதிராளி என்றும் குறிப்பிட்டார்.