ராஜஸ்தானில் தமது அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் 15 கோடி ரூபாய் வரை பாஜக பேரம் பேசுவதாக முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தனது அரசு நடவடிக்கை எடுத்துவரும்வேளையில், எதிர்க்கட்சியான பாஜக பிரச்னைகளை ஏற்படுத்துவதாகவும், தமது அரசை கவிழ்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 24 பேரும், கெலாட் அரசை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டிருப்பதாக கூட்டறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.