பாரத்நெட் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்ய உத்தரவிட்டது தொடர்பாக முதலமைச்சர் உடனடியாக மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பாரபட்சமாகவும், வேண்டிய சிலர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையிலும் விடப்பட்டுள்ள 2000 கோடி ரூபாய் பாரத்நெட் டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்ற புகாரை காணொலிக் காட்சி வாயிலாக விசாரித்த மத்திய அரசு டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பாரத்நெட் டெண்டர் குறித்து தி.மு.க அளித்த புகாரில் முகாந்திரம் இல்லை என்று முடித்து வைத்து விட்டதாக, உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை பதிலளித்தாகவும், உண்மையை மறைக்க தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் விதண்டாவாதம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் உதயகுமார் தற்போது ராஜிநாமா செய்வாரா? அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவாரா? முறைகேடாக டெண்டர் விட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.