லடாக்கில் இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்து உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அந்த நிலபகுதியை மத்தியில் ஆளும் மோடி அரசு எப்படி மீட்க போகிறது என கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோ செய்தியில், பிரதமர் மோடி ஊடுருவல் நடைபெறவில்லை என தெரிவித்து வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சரும், வெளியுறவு அமைச்சரும் திரும்பத் திரும்ப சீன ஊடுருவல் குறித்து பேசுவதாக குறிப்பிட்டுள்ளார்.
சீன ஊடுருவல் நடந்திருப்பதை இந்திய ராணுவ ஜெனரல்களும், பாதுகாப்பு நிபுணர்களும் உறுதி செய்திருப்பதாக தெரிவித்துள்ள சோனியா, கால்வன் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பை தடுக்க முயல்கையிலேயே 20 வீரர்களும் பலியாகி உள்ளதாக கூறியுள்ளார்.
அவர்களுக்கு நாடு எப்போதும் கடன்பட்டு உள்ளதாகவும், நாம் பாதுகாப்பாக இருப்பதற்கு தங்களது உயிரை அபாயத்தில் வைத்து நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள்தான் காரணமெனவும் சோனியா கூறியுள்ளார்.