மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ((ஐ.மு.கூ. )) அரசு ஆட்சியிலிருந்தபோது, பிரதமர் நிவாரண நிதி ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு திருப்பி விடப்பட்டதாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சக மக்களுக்கு தேவை எழுகையில் உதவவே, இந்திய மக்கள் தாங்கள் சிரமப்பட்டு சம்பாதித்த பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிப்பதாகவும், அப்படியிருக்கையில் அந்த நிதி குடும்பத்தினரால் நடத்தப்படும் அறக்கட்டளைக்கு திருப்பி விடப்பட்டது, வெட்கக்கேடான மோசடி மட்டுமல்லாமல் இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் என தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது பிரதமர் நிவாரண நிதி வாரிய தலைவராகவும், ராஜீவ் காந்தி அறக்கட்டளை தலைவராகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வகித்ததாகவும் நட்டா குறிப்பிட்டுள்ளார்.