மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நிர்வாக திறமையின்மையால்தான் சீன எல்லையில் பிரச்னை நேரிட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
லடாக்கின் கிழக்கு பகுதியான கால்வன் பள்ளத்தாக்கில் பதற்றம் நிலவும் சூழலில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா, கடுமையான பொருளாதார நெருக்கடியாலும், மிகப்பெரிய தொற்று நோயாலும் இந்தியா பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சீன எல்லையிலும் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த 3 பிரச்னைகளும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நிர்வாக திறமையின்மையாலும், தவறான கொள்கைகளாலுமே நேரிட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதன் ஒட்டுமொத்த விளைவாக, நாடு முழுமைக்கும் அச்சம், பீதி நிலவுவதுடன், தேச பாதுகாப்பு மற்றும் ஒருமைபாட்டுக்கு அபாயத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார்.