மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மேலவையில் காலியாக உள்ள இடங்களை பங்கிடுவதில், ஆளும் சிவசேனா கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விதான் பரிஷத் எனப்படும் மகாராஷ்டிர மேலவையில் 12 இடங்கள் காலியாகின்றன. இவற்றில் சிவசேனாவுக்கு 5, தேசியவாத காங்கிரசுக்கு 4, காங்கிரசுக்கு 3 என ஏற்கனவே இந்த 3 கூட்டணிக் கட்சிகளிடமும் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், திடீரென்று தலா 4 இடங்கள் என பங்கிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கி உள்ளது.
இதை இதர 2 கூட்டணி கட்சிகளும் ஏற்காத நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயே சந்தித்து முறையிட தீர்மானித்துள்ளதாக காங்கிரஸ் முக்கிய தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்