கருணாநிதி குடும்பத்தை தவிர தி.மு.க.வில் உள்ள அனைத்து தலைவர்களும் முதலமைச்சரின் செயல்பாடுகளை பாராட்டி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செயல்படுங்கள் முதல்வரே என்ற உதயநிதி ஸ்டாலின் கருத்து குறித்த கேள்விக்கு தி.மு.க.வில் தற்போது மூத்த தலைவர்களே இல்லையா? என்றும், உதயநிதி ஸ்டாலின் எல்லாம் கேள்வி கேட்கும் நிலைக்கு அக்கட்சியில் நிலைமை உள்ளதாகவும் பதில் அளித்தார்.