தெலங்கானா மாநில அரசு கடந்த இரண்டு நாட்களாக 500 க்கும் மேற்பட்ட குணமடையாத கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் இருந்து விடுவித்துள்ளதாக மாநில பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது.
இதனால் மாநிலத்தில் சமூக பரவல் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாஜக எம்எல்சி ராமச்சந்திர ராவ் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளுக்கு அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சோதனை நடத்தாமல் திருப்பி அனுப்புவதால், ஐதாராபாத் மாநகரப் பகுதிகளில் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாகவும், இதற்கு முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பொறுப்பேற்க வேண்டும் என மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷணசாகர் ராவ் கூறியுள்ளார்.