உடல் நலம் குன்றி உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து என்றும், சட்டமன்றத்தில் அதிமுகவை எதிர்த்து பேசுபவராக இருந்தாலும் கட்சி பேதமின்றி அவரை காப்பாற்ற அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை பழையகுயவர்பாளையம் பகுதியை சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களை அதிமுக காப்பாற்றும் என்றார்.