ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ வெளியிட்டதை விமர்சிக்கும் வகையில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா டுவிட் செய்துள்ளார்.
அதிகாரத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என்பது சோனியாவின் வீடியோ செய்தி.
அனைவரின் ஒத்துழைப்பும் இன்றி கொரோனாவை வெல்ல முடியாது என்று கூறிய அவர், அனைவரும் வீடுகளில் இருந்தவாறு, ஊரடங்கை பின்பற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். மோடி பேசுவதற்கு முன்னர் சோனியா இந்த வீடியோவை வெளியிட்டிருக்க கூடாது என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ட்விட்டரில், சோனியாவுக்கு நன்றி தெரிவித்துள்ள நட்டா, உடல் நிலையை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறும் கூறி இருக்கிறார்.