தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு திமுக தான் காரணம் என்று மீன் வளத் துறை அமைச்சர் D. ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழக அரசு மீது அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து, சென்னை - பட்டினப் பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மு.க. ஸ்டாலின் குதர்க்க எண்ணத்துடன் விமர்சித்து வருவதாகவும் அவர் வெளியிட்ட எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் கிடையாது என்றும் அமைச்சர் டி. ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.