நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் வெளியாகியுள்ள செய்தியில், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் அவர் செயல்பட்டு வந்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்றும் அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த காரணத்தால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.