தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகள் வாங்க 3 கோடி ரூபாய் வழங்குவதாக, எம்.பி.யும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான கருவிகள், நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், கொரோனா நோயை கட்டுப்படுத்தத் தேவைப்படும் பிற கருவிகளை வாங்க தமிழ்நாடு அரசுக்கு பெருந்தொகை தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்பொருட்டு தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல்கட்டமாக 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் தேவையை பொறுத்து அடுத்தத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.