இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர், வழக்கறிஞர்களின் சேமநல நிதியை 2 லட்சத்திலிருந்து 4 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, புழல் மத்திய சிறை வளாகத்தில் 25 லட்சம் செலவில் வானொலி நிலையம் அமைப்பது, சிறைவாசிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உணவு மற்றும் அளவு முறையை மாற்றி அமைக்க குழு அமைத்திருப்பது போன்ற புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும், பல்வேறு மாவட்டங்களில் புதிய நீதிமன்றங்களை அமைப்பதோடு, சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வதை தடுக்க நான் லீனியர் ஜங்ஷன் டிடெக்டர் ((non linear junction detector)) ஏற்படுத்தப்படும் எனவும் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.