மாணவர்களின் விண்ணப்பத்திற்கேற்ப அந்தந்த பகுதிகளில் கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்தார்.
கேள்வி நேரத்தின் போது பேசிய திருவள்ளூர் தொகுதி எம் எல் ஏ வி.ஜி.ராஜேந்திரன், தனது தொகுதி மாணவர்கள் பட்டப்படிப்பு பயில நீண்ட தூரம் பயணித்து சென்னைக்கு அருகில் செல்ல வேண்டி உள்ளதால், பூண்டி ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தரப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கேபி அன்பழகன், மாணவர்களின் விண்ணப்பத்துக்கு ஏற்றவாறு புதிய கல்லூரிகள் அமைக்கப்படுவதாகவும், அந்த வகையில் பூண்டி ஒன்றியத்தில் புதிய கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.