மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதல் கால அவகாசம் தருமாறு உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்டுள்ள மத்திய பிரதேச சட்டப்பேரவையை உடனே கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் கமல் நாத்துக்கு உத்தரவிடுமாறு பாஜக தரப்பு தாக்கல் செய்த மனுவில் இன்று விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் துபே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் குறித்து தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடத்திய பின்னரே இந்த வழக்கில் முடிவு காண வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் மக்களிடம் எந்த முகத்துடன் சென்று வாக்கு கேட்பார்கள் என்று காங்கிரஸ் வழக்கறிஞர் கூறியதை தாமும் ஏற்றுக் கொள்வதாக நீதிபதி ஹேமந்த் குப்தா தெரிவித்தார்.