கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகம் முழுவதும் திமுக நிகழ்ச்சிகள் வருகிற 31ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் வருகிற 29ந்தேதி அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொதுக்குழு ஒத்தி வைக்கப்படுவதோடு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ள கழக நிகழ்ச்சிகள் யாவும் வருகிற 31ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்