சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்வதே பாஜகவின் நோக்கம் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
விமானம் மூலம் கோவை வந்த அவருக்கு, பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்து இயக்க நிர்வாகிகள் மீதான தாக்குதல்களை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.