கொரானா வைரஸ் குறித்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களை மூட அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா, கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொரானாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு நாள்தோ றும் ஏராளமானோர் வந்து செல்வதாகக் குறிப்பிட்டுள்ள ராமதாஸ், கேரளம், கர்நாடகத்துடனான எல்லைகளை தற்காலிகமாக மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் அதிகமாகக் கூடும் நிகழ்வுகளை தடுக்க நடவடிக்கை தேவை என்றும் ராமதாஸ் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.