பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஜோதிர் ஆதித்யா சிந்தியா பாஜகவில் இணையவிருப்பது குறித்தும், அவரை மாநிலங்களவை மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.