தேமுதிகவுடன் கூட்டணி உறுதியாக உள்ளதாக மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், த.மா.கா தலைவர் ஜி.கே. வாசனுக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது, அதிமுக ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவு என்றார்.
அதிமுக ஓர் ஆலமரம் என குறிப்பிட்ட டி.ஜெயக்குமார், தேமுதிகவுக்கு உரிய நேரத்தில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.