கொரானா குறித்து பீதியடைய வேண்டாம் என அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், மருத்துவரான திமுக எம்.எல்.ஏ சரவணன் சட்டப்பேரவைக்கு முகக்கவசம் அணிந்து வந்ததை ஏற்க முடியாது என்றும் இதனால் முகக்கவசம் விற்பனை செய்பவர்கள் அதனை கூடுதல் விலைக்கு விற்க நேரிடும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் தியாகராய நகரில் நடைபெற்ற கடன் உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.