கொரானா தடுப்பு நடவடிக்கையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவசர ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
கொரானா பாதிப்பு அண்டை மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரானா பாரவுவதை தடுப்பது குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட வாரியாக குழுக்களை அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
கொரானாவுக்காக தனி வார்டுகளை ஏற்படுத்துதல், பொதுமக்கள் மத்தியில் வீன் வதந்திகள் பரவுவதை தடுத்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து, கொரானா தடுப்பு நடவடிக்கைகளையும் விழிப்புணர்வு பிரச்சரங்களை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரானா தடுப்பு நடவடிக்கையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவசர ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.