கால்நடை இனப்பெருக்கச் சட்டம் மூலம் நாட்டின காளைகளின் இனப்பெருக்கத்தை தடுக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைக்கும் திட்ட பணிகளை, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், காளைகளுடன் இனச்சேர்க்கைக்கு சேர்க்கும்போது பசுக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், காளைகளை ஆய்வு செய்து உபயோகப்படுத்த வேண்டும் என்றுதான் சட்டம் சொல்கிறது என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், 50 கோடி ரூபாய் செலவில் ஊட்டியில் உரைவிந்து தயாரிக்கும் மையம் உருவாக்கப்படுவதாகவும் கூறினார்.