காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை மக்களவை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டுமென திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில், டெல்லி கலவரங்கள் குறித்து மக்களவையில் விவாதம் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டதால் 7 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் கோயிலாக நாடாளுமன்றம் தொடர்ந்து கருதப்பட்டு வருவதாகவும், இதை நினைவில் கொண்டு பாஜக அரசு செயல்பட்டால் நல்லது என்றும் தெரிவித்துள்ள ஸ்டாலின், சஸ்பெண்ட் நடவடிக்கையை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.