பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்துப் பேசினார்.
டெல்லி முதலமைச்சராக பதவியேற்றபிறகு, கெஜ்ரிவால் கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இதையடுத்து டெல்லியில் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரை சந்தித்துப் பேசினார்.
இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கெஜ்ரிவால், டெல்லி கலவரம், கொரானா வைரஸ் தடுப்பு நவடிக்கை குறித்து பிரதமருடன் பேசியதாக கூறினார்.
டெல்லியில் நடைபெற்ற மோதல்களுக்கு காரணமானவர்கள், எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தப்பித்துவிடக்கூடாது, கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டுமென பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.