உலகையே உலுக்கி வரும் கொரானா வைரசுக்கு கோமியம் மற்றும் பசுஞ்சாணம் ஆகியவை சிறந்த மருந்து என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுமன் ஹரிபிரயா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநில சட்டசபை கூட்டத்தொடர் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோமியம் மற்றும் பசுஞ்சாணம் ஆகியவை சிறந்த மருந்தாக இருக்கும் என்றும் நம்புவதாக தெரிவித்தார்.
வீட்டு முற்றத்தை பசுஞ்சாணத்தால் துடைப்பதும், கிருமிநாசினியாக கோமியத்தை வீட்டில் தெளிப்பதும் தமிழகத்தில் இருந்துவரும் நடைமுறையாகும்.