செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ராஜீவ் காந்தியிடம் மண்டியிட்டது மானம்..! வருத்தம் தெரிவித்தார் தம்பி

Mar 03, 2020 07:36:53 AM

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சாட்டை துரைமுருகன் என்பவர், ராஜீவ்காந்தியின் நினைவிடத்திற்கு சென்று தமிழர்களை தொட்டதால் தூக்கினோம் என்று சீமான் குரலில் டிக்டாக் செய்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்து புதைத்தது தமிழர்கள் தான் என்று மேடையில் முழங்கினார்.

அதற்கு ஒருபடி மேலே போய் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளரான சாட்டை துரைமுருகன் என்பவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தியின் நினைவிடத்திற்கே சென்று, தமிழர்களை தொட்டதால் தூக்கினோம் என்று சீமான் குரலில் டிக்டாக் செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார்

ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று அவரை இழிவுபடுத்தும் விதமாக வீடியோ பதிவிட்ட சாட்டை துரைமுருகன் மீது தேசியபாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர். இதையடுத்து துரைமுருகனை தொடர்பு கொண்டு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மேடைக்கு மேடை மண்டியிடாத மானத்துக்கு சொந்தகாரர்கள் என சூளுரைக்கும், நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகியான துரைமுருகனிடம் இருந்து மீண்டும் ஒரு மன்னிப்பு வீடியோ வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ஒரு பெண்ணை வந்தேறி என்று சாதி ரீதியாக இழிவுபடுத்தி வீடியோ பதிவிட்டதால் துரைமுருகன் , நாம் தமிழர் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.


Advertisement
"தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது பா.ஜ.க அல்லாத கட்சிகளையே குறிக்கும்" - எடப்பாடி பழனிசாமி
மருத்துவரை கத்தியால் குத்தபட்ட சம்பவத்திர்க்கு த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்
த.வெ.க. தலைவர் விஜய் மீது வைத்துள்ள பாசம் குறையவில்லை - சீமான்
இ.பி.எஸ் பண்பாடு இல்லாமல் பேசுகிறார் : முதலமைச்சர்
ரூ.7.32 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை ஆய்வுசெய்தார் அமைச்சர் எ.வ.வேலு
த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் 18 மாதங்கள் தொண்டர்கள் ஒற்றுமையோடு இருக்க வேண்டுகோள்
நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல கண்டிப்பாக இ-பாஸ் அவசியம்...
விஜயுடன் இணைந்து புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதால் கூட்டணி மாற்றம் என்று கருத வேண்டாம் : திருமாவளவன்
நூலகப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

Advertisement
Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?

Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்


Advertisement