நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளின்போது, எம்பிக்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியுள்ளார்.
மக்களவையில், டெல்லி வன்முறைக்குப் பொறுப்பேற்று, அமித் ஷா பதவி விலக கோரி, காங்கிரஸ் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். பிற்பகலில், பாஜக கொறடாவை முற்றுகையிட முயன்றபோது, தள்ளுமுள்ளு மூண்டதாக புகார் எழுந்தது.
அந்த சமயத்தில், தன்னை பாஜக பெண் எம்.பி ஜாஸ்கெளர் மீனா தாக்கியதாக, காங்கிரஸ் பெண் எம்.பி ரம்யா ஹரிதாஸ், மக்களவை சபாநாயகரிடம் புகார் மனு அளித்தார்.
இதனை மறுத்த பாஜக பெண் எம்.பி., தன்னை காங்கிரஸ் பெண் எம்.பி தாக்கியதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி முன்னிலையில் சபாநாயகரிடம் புகார் மனு அளித்தார்.
இன்றைய களேபரங்கள் தொடர்பாக பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, சில எம்.பிக்களின் செயல்பாடு, மனதில் வலியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.