கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு, தனது மகள் திருமண விழாவை 500 கோடி ரூபாய் செலவில், தொடர்ச்சியாக 9 நாட்களுக்கு மிக பிரமாண்டமாக நடத்தி வருகிறார்.
பெங்களூரு பேலஸ் மைதானத்தில் வருகிற 5ஆம் தேதி நடக்கவுள்ள திருமணத்துக்காக கடந்த 27ஆம் தேதி முதல் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. செந்தூரம்,குங்குமம், சந்தனம், அரிசி உள்ளிட்டவை அடங்கிய ஒரு லட்சம் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
விழாவிற்காக ஹம்பியில் உள்ள புகழ்பெற்ற விருபாக் ஷி கோவிலை மாடலாக கொண்டு 4 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. மணமகள் ரக்சிதாவுக்கான மேக்கப் பணிகளை மேற்கொள்ள, நடிகை தீபிகா படுகோனின் மேக்கப் மேன் அழைக்கப்பட்டுள்ளார். முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்தை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தவர்களே இத்திருமணத்திற்கும் அழைக்கப்பட்டுள்ளனர்.