மத்திய அரசே வேண்டுகோள் வைக்க கூடிய தலைவராக திமுக தலைவர் ஸ்டாலின் இருப்பதாக, திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை மண்ணடியில் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, வடசென்னை திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கனிமொழி, பிஜேபி எதிரியாக குறிவைக்கக் கூடிய தலைவராக ஸ்டாலின் இருக்கிறார் என்பதே, அவருக்கு கிடைத்த வெற்றி எனக் கூறினார்.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் கருணாநிதி இருக்கும் போது இயற்றப்பட்டிருந்தால், அவர் என்ன முடிவு எடுத்து இருப்பாரோ அதே முடிவை தான் ஸ்டாலின் தற்போது எடுத்திருப்பதாகவும் கனிமொழி குறிப்பிட்டார்.