பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக உடனான கூட்டணி தொடரும் என ஐக்கிய ஜனதாதளத் தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பாட்னாவில் ஐக்கிய ஜனதாதளத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கூட்டணி இருநூற்றுக்கு மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பீகாரில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் - ராஷ்டிரிய ஜனதாதளம் - காங்கிரஸ் ஆகியவை கூட்டணி வைத்து ஆட்சியைக் கைப்பற்றின. அந்தக் கூட்டணி முறிந்தபோது ஐக்கிய ஜனதாதளத்துக்கு பாஜக கைகொடுத்தது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து ஐக்கிய ஜனதாதளம் போட்டியிட்டது.