கூட்டணியில் இருந்தாலும் தனித்து செயல்பட்டாலும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேமுதிக தயாராக உள்ளது என்று விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக கொடி நாளை முன்னிட்டு சென்னை மணப்பாக்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன், தங்களுக்கு மாநிலங்களவை எம்பி பதவி அளிப்பது குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
ரஜினியும், கமலும் தனித்தோ இணைந்தோ நடிகர் சங்க தேர்தலை கூட எதிர்கொண்டது இல்லை என்று தெரிவித்த விஜய பிரபாகரன், அவர்கள் சட்டமன்றத் தேர்தலில் இணைந்து செயல்படப் போவதாக கூறுவது கேள்விக்குறியாக உள்ளது என விமர்சித்தார்.