மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அர்விந்த் கெஜ்ரிவால் போன்றோர் போராட்டத்தில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்களை வன்முறைக்கு இழுத்து செல்லும் வகையில் செயல்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்தார். வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என ரஜினி கூறியது நியாயமான கருத்து தான் என தெரிவித்த அவர், அது தான் அதிமுகவும் கருத்தாக இருப்பதாகவும் கூறினார். எந்த வன்முறை நடந்தாலும் அதற்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ் இருப்பது எனக்கூறுவது தவறு எனவும் அவர் தெரிவித்தார்.